இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் - ஜனாதிபதியின் விசேட கட்டளை
பொது பாதுகாப்பை முன்னெடுத்து செல்வதற்காக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரை நாடு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தும் விசேட கட்டளை ஒன்று மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டளையை ஜனாதிபதி மீண்டும் பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு சட்டமூலத்தின் 12வது ஷரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி, இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற அவை நிகழ்வுகளின் ஆரம்பத்தில் சபாநாயகர், ஜனாதிபதியின் இந்த கட்டளை குறித்து அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இதேபோன்றதொரு கட்டளை கடந்த மாதமும் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan