இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர் - வெளியானது விசேட அறிவிப்பு
நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட அறிப்பொன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் (Gotabaya Rajapaksa) வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின் போது வாசித்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் கூறியிருந்தார்.
பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இதேபோன்றதொரு உத்தரவானது ஒரு மாதத்திற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 26 நிமிடங்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam