அம்மாக்களின் கண்ணீரை உலக நாடுகள் பார்த்து கொண்டு இருக்கின்றது - மனுவல் உதயச்சந்திரா

Srilanka Government Army Mannar
By Ashik Sep 18, 2021 06:50 AM GMT
Report

காணாமலாக்கப்பட்ட பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்காகவே, உறவுகளாகிய நாங்கள் இன்று வீதியில் இறங்கி கண்ணீர் சிந்திப்போராடி வருகிறோம், இதற்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜெனிவா 48ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நாங்கள் ஜெனிவாவிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு தீர்வு தேவை.


காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அம்மாக்கள் இன்று சுமார் 1500 நாட்களாக வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

நாங்கள் வீதியில் இறங்கி எமது உறவுகளை மீட்கப் போராடுவது ஜெனிவாவிற்கு இல்லை உலக நாடுகளுக்கே தெரியும். நாங்கள் நீதிக்காகப் போராடி வருகிறோம். நிதிக்காகப் போராடவில்லை. எமது பிள்ளைகளுக்காகவே போராடி வருகிறோம்.

உயிரோடு ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை மீட்கவே இன்று வீதியில் இறங்கிப் போராடுகின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், உறவுகளுக்காகவே உறவுகளாகிய நாங்கள் இன்று வீதியில் இறங்கி கண்ணீர் சிந்திப் போராடி வருகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தை நம்பியே எமது பிள்ளைகளை நாங்கள் ஒப்படைத்தோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்.

நாங்கள் பாதுகாத்துத் தருவோம் என ராணுவம் கூறியதன் காரணமாகவே நாங்கள் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். மன்னார் மாவட்டத்தில் முப்படையை நம்பியே நாங்கள் இருந்தோம்.

ஒன்றும் நடக்காது எமது பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி இருந்தோம். எனது மகன் 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி வீட்டில் வந்து கடற்படையினர் விசாரணைக்கு என அழைத்துச் சென்றனர்.

ஆனால் அழைத்துச் சென்ற எனது மகனின் நிலைப்பாடு இது வரை என்ன என்று தெரியாது. இலங்கையில் உள்ள அனைத்து கடற்படை முகாம்களுக்கும் சென்று எனது பிள்ளையை தேடினேன்.

ஆனால் இன்று வரை எனது மகனின் நிலை என்ன என்று தெரியவில்லை. நாங்கள் இறப்பதற்கு முன் எமது பிள்ளைகளின் நிலை என்ன என்று எமக்குத் தெரிய வேண்டும்.

எமது பிள்ளைகளின் நிலை என்ன? அவர்களை எங்கே வைத்துள்ளீர்கள்? அவர்கள் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்று தான் நாங்கள் இன்று உலக நாடுகளிடம் கேட்கின்றோம். எமது பிள்ளைகளை வீதியில் நின்று தேடுகின்ற அம்மாக்களாக நாங்கள் இருக்கின்றோம்.

அம்மாக்களின் கண்ணீரை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. ஜெனிவா பேச்சுவார்த்தையில் எமக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்.

இலங்கை இராணுவத்தையோ அல்லது அரசாங்கத்தையோ நாங்கள் நம்பவில்லை. எங்களுக்குச் சர்வதேசம் ஒரு நல்ல பதிலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜெனிவா 48 ஆவது அமர்வில் கோரிக்கை விடுக்கின்றோம்.

எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். எங்களின் காலங்கள் இன்னும் அதிகம் இல்லை. நாங்கள் இறந்து விட்டோம் என்றால் சாட்சியங்கள் அழிந்து விடும். அதனையே அரசாங்கம் பார்த்துக் கொண்டு இருக்கின்றது.

ஒரு அம்மா உயிருடன் இருக்கும் வரை தனது பிள்ளைகளுக்கான போராட்டம் நடந்து கொண்டு இருக்கும்.எனவே எங்களுக்காகச் சர்வதேசம் ஜெனிவா பேச்சு வார்த்தையில் பேசி தீர்வை பெற்றுத் தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US