முன் பிள்ளை பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்புக்கான தேசிய வாரத்தின் ஏழாம் நாள் நிகழ்வு
முன் பிள்ளை பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்புக்கான தேசிய வாரத்தின் 2025ஆம் ஆண்டுக்கான ஏழாம் நாள் நிகழ்வு "சிறுவர் நாம் உலகை வெல்ல விளையாடுவதற்கு இடமளியுங்கள்" எனும் கருப்பொருளில் கொண்டாடப்பட்டது.
விளையாட்டு நிகழ்ச்சிகள்
குறித்த இந்நிகழ்வு முன் பிள்ளை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் நிதி பங்களிப்புடன் திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (22) திருகோணமலை மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டு குளக்கோட்டன் தோப்பு சிறுவர் பூங்காவில் பிள்ளைகளுக்கான மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டது.
மாவட்ட முன்பிள்ளைப்பருவ இணைப்பாளர் கே.நப்ரத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமார, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதி கல்வி பணிப்பாளர் ஆர்.சுதர்சன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் திருகோணமலை காரியாலயத்தின் பணிப்பாளர் எஸ்.மசூன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
பங்குபற்றியவர்கள்
இந்நிகழ்வினை மேற்கொண்டு நடத்தி செல்வதற்காக வளவாளர்களாக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு இணைப்பாளர் ஏ.எல்.ரவிஸ், மாவட்ட உள சமூக இணைப்பாளர் எம்.எம்.ஸம்ஸித், மகளிர் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் தீபானி ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
குறித்த நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்கள் 100 பேரும், அவர்களின் பெற்றோர்கள் 100 பேரும், பாலர் பாடசாலை ஆசிரியைகள் உட்பட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
