கோட்டாவின் அப்பாவித்தனத்தை காட்டவே இந்த புத்தக வெளியீடு : தேசிய ஐக்கிய முன்னணி
தம்மை பதவி நீக்கம் செய்வதற்கான சதித்திட்டம் குறித்து கோட்டாபய ராஜபக்ச
வெளியிட்டுள்ள நூல் தமது அப்பாவித்தனத்தை காட்டும் புதிய
முயற்சியாகும் என தேசிய ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது.
அண்மையில் வெளியான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 'என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி' எனப்படும் புத்தகம் குறித்து தேசிய ஐக்கிய முன்னணி அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில், “ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, இலங்கை மக்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
வெளியேற்றப்பட காரணம்
மேலும், தாம் ஒரு இனவாதியாக சித்தரிக்கப்படுவதற்கான விருப்பமின்மையை அவர் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நூலில் அவர் முழு இலங்கையாலும் போற்றப்படும் ஜனநாயக இலட்சியங்களின் இலட்சியங்களை முற்றாக மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது. இந்தநிலையில் கோட்டாபய மக்களால் மட்டும் வெளியேற்றப்படவில்லை.
கோவிட் காரணமாக இறந்த முஸ்லிம்களின் தகனத்திற்கு காரணமின்றி அவர் அனுமதி வழங்கியதால், தெய்வீக தலையீடும் அவரை வெளியேற்றியது.
ஆட்சியில் தோல்வி
உண்மையான நிபுணர்களின் பேச்சைக் கேட்பதற்குப் பதிலாக, பல்வேறு முக்கியமான பிரச்சினைகளில் அவர் நிபுணத்துவம் பெற்றவர் போன்று செயற்பட்டார்.
உரத்தடை போன்ற சவால்கள் உட்பட்ட ஆட்சியின் அனைத்து அம்சங்களிலும் அவர் தோல்வியடைந்தார். கோட்டாபய ராஜபக்ச எல்லா அர்த்தத்திலும் சர்வாதிகாரியாக இருந்தார்.
இந்த சூழ்நிலையில் இலங்கை மக்களை பேரழிவில் இருந்து காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் களத்தில் இறங்கினான்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
