யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள்
யாழ்ப்பாணத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை தேசியக் கொடி ஏற்றலோடு பாதுகாப்பு தின நிகழ்வு ஆரம்பமாகியிருந்தன.
இதில் சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு மதத் தலைவர்களின் ஆசியுரையை தொடர்ந்து சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வுகளில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சூரிய ராஜ், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam