பிடியளவு கமநிலத்திற்கு என்ற தேசிய வேலைத்திட்டம் திருகோணமலையில் ஆரம்பம்
"பிடியளவு கமநிலத்திற்கு” எனும் தொனிப்பொருளின் கீழ் உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு பயிரிடப்படாத, சகல கமத்தொழில் காணிகளையும் வினைத்திறனாகப் பயிர்செய்கையில் ஈடுபடுத்தல் எனும் தேசிய வேலைத்திட்டம் திருகோணமலை - சேருநுவர பிரதேசத்திலும் இன்று (11) இடம்பெற்றுள்ளது.
நடப்பட்ட மரக்கன்றுகள்
சேருநுவர கமநல சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நௌபர் தலைமையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது "பிடியளவு கமநலத்திற்கு" வேலைத்திட்டத்தில், பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மேட்டுநில காணிகளில் விவசாயிகள் நடுவதற்கு முன்வந்த மரக்கன்றுகள் நடப்பட்டன.
அத்தோடு, பயிரிடப்படாதுள்ள நிலங்களை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்தல் தொடர்பாக பிரதேச விவசாயிகளுக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இத் தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் சேருநுவர பிரதேச சபை உறுப்பினர் சம்பத், சேருநுவர பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் குணசீலன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சுஜாத், சேருநுவர வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கமநல சேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 5 மணி நேரம் முன்

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri
