ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு
அரசாங்கங்கள் மாறினாலும் நிலையான கொள்கையை பின்பற்றுவது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை என்பனவற்றை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு அவர் துறைசார் அமைச்சர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
காலத்திற்கு காலம் மாற்றமடையும் கொள்கையினால் நாடுகளுக்கு முன்னேற முடியாது என்று அவர் கூறினார்.
தேசிய கொள்கை
தேசிய கொள்கை மதிப்பீட்டு செயற்றிட்டத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றினார்.
நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன இதனை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
அரச கொள்கை
2017ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த யோசனை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டு உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தக் கொள்கை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரச கொள்கைகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் இந்த கொள்கைகள் மும்மொழிகளிலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
