இலங்கை தேசிய சமாதான பேரவையால் அதிகாரப்பகிர்வு எனும் தொனிப்பொருளில் விசேட செயலமர்வு!
இலங்கை தேசிய சமாதான பேராவையால் 'அதிகார பகிர்வினை சூழவுள்ள எதிர் மறை கருத்துக்களை எதிர்கொள்ளல் மற்றும் உள்ளடக்கத்திற்கான வலியுறுத்தல்' எனும் தொனிப்பொருளில் அதிகாரப்பகிர்வு தொடர்பான விசேட செயலமர்வு இடம்பெற்றது.
இந்த செயலமர்வு நேற்று கிளிநொச்சியில் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு வடமாகாண சபையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
விசேட செயலமர்வு
இவ் செயலமர்வில் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பான பல்வேறு வகையான கருத்துக்கள் பற்றி கலந்துரையாடபட்டதுடன் அதிகார பகிர்வு தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடபட்டது.
மாகாண சபை தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினர் கலந்துகொள்வதன் அவசியம் மற்றும் அது தொடர்பான கருத்துக்கள் மற்றும் கேள்விகளும் முன் வைக்கப்பட்டன.
இவ் விசேட கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து மாதர் சங்கம் மற்றும் கிராம மட்டத்தில் இருந்து செயற்படும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 47 நிமிடங்கள் முன்

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
