பிரான்சில் தேசிய இசை விழாவில் கலந்துக் கொள்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பிரான்சில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அங்கு நடைபெற்று வரும் புகழ்பெற்ற “Fête de la Musique” தேசிய இசை விழாவில் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் மூன்றில் ஒரு பகுதி கடுமையான வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை 40°C முதல் 41°C வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் தற்காலிகமாக பூட்டு
வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அவசர மருத்துவச் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், மருத்துவப் பணியாளர்கள் தங்களது கவனத்தை முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மீது செலுத்த ஏதுவாகவும் இந்த மதுபானக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த அதீத வெப்ப அலையினால் நாட்டின் பல பகுதிகளில் தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஏதுவாக, பாரிஸ் நகரிலுள்ள பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.