நிலைமை மோசமடையக்கூடும்..! இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயமுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.
இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 45,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வேகமாக பரவும் டெங்கு நோய்
தற்போது மேல் மாகாணத்தின், களுத்துறை மாவட்ட பாணந்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பியகம ஆகிய பகுதிகளிலும் டெங்கு நோய் மிக வேகமாகப் பரவி வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள பல மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமான அளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களையும் சுற்றாடலையும் சுத்தப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 12 பந்துகளில் 36 ரன் விளாசிய ஷானகா! சியாட்டில் அபார வெற்றி News Lankasri
முதல் நாளிலேயே நல்ல வசூல் வேட்டை செய்துள்ள விஜய் ஆண்டனியின் நூறு சாமி திரைப்படம்... கலெக்ஷன் விவரம் இதோ Cineulagam