இரு சம்பளங்கள் பெறும் அரச அதிகாரிகள் குறித்து வெளியான தகவல்
அரசாங்கத்திடம் இருந்து இரண்டு சம்பளங்களைப் பெற்றுக் கொண்டு, அரச சேவையில் தொடர்ந்து நீடித்து வரும் மற்றுமொரு குழுவினர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு சம்பளங்கள்
தினேஷ் டி அல்விஸ் என்ற சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர், இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது முறைப்பாட்டில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் 16 அதிகாரிகள் அரசாங்கத்திடம் இருந்து இரண்டு சம்பளங்களைப் பெற்றுவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளராகப் பணியாற்றிய சுகீஷ்வர பண்டாரவும், இரு அரச நிறுவனங்களிடம் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராகவும், ஜனாதிபதி நிதியத்தின் கீழ் ஒரு திட்டப் பணியாளராகவுமாக அவர் சம்பளம் பெற்றதாகக் கூறப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சுகீஸ்வர பண்டார, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.