பறந்து கொண்டிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட பெரும் ஆபத்து - விமானியின் சாதுர்யத்திற்கு பாராட்டு
அண்மையில் கொழும்பில் இருந்து சிட்னி நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL606 விமானத்தில் மின்னல் தாக்கிய போது பயணிகளை பாதுகாப்பாக காப்பாற்றிய விமானப் பணிக்குழுவினருக்கு பயணிகள் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த கடந்த வாரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவுஸ்திரேலலிய நோக்கி பயணித்த விமானத்தை மின்னல் தாக்கிய நிலையில், ஒரு பக்க இயந்திரம் பாதிப்படைந்த நிலையில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த நிலையில் காஞ்சன டி சில்வா என்ற பயணி இது தொடர்பில் தனது சமூக வளைத்த பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
அந்த பதிவில், “கடந்த 12ஆம் திகதியன்று கொழும்பில் இருந்து சிட்னி நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL606 விமானத்தின் விமானி மற்றும் விமானப்பணிக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஒரு விசேட குடும்ப நிகழ்வைக் கொண்டாடிவிட்டு, அன்பானவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நான் சிட்னி திரும்புவதற்காக UL606 விமானத்தில் ஏறினேன்.
ஒரு சாதாரணமான பயணமாகத் தொடங்கியது. எனினும் எதிர்பாராத விதமாக அந்த பயணம் பயமுறுத்தும் அனுபவமாக மாறியது.
அந்த இக்கட்டான தருணத்தில் விமானத்தின் விமானி மற்றும் பணியாளர்கள் காட்டிய தொழில்முறைத்திறன், நிதானம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை எங்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்தன.
அவர்களின் அமைதியான அணுகுமுறை பயணிகளை பதற்றமடையாமல் வைத்திருக்க உதவியதுடன், நாங்கள் பாதுகாப்பான கைகளில் தான் இருக்கிறோம் என்பதை எங்களுக்கு நினைவூட்டியது.
மாற்று விமானம் ஏற்பாடு
கட்டுநாயக்கவில் பத்திரமாக தரையிறங்கிய பின்னர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வழங்கிய கவனிப்பும் ஆதரவும் மிகச் சிறந்ததாக இருந்தது. உணவு, தண்ணீர் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகள் உடனுக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன், பயணிகள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் எங்களது பயணத்தைத் தொடர்ந்து சிட்னிக்கு பத்திரமாகச் சென்றடைய, மிக விரைவாக மற்றொரு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது.
எனது இதயத்தின் ஆழத்திலிருந்து, இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அன்பையும், தொழில்முறைத்திறனையும், பயணிகளின் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.