இந்திய மருந்து விநியோகத்தர்களால் நெருக்கடிக்குள் தள்ளப்படும் மக்கள்!
இலங்கையில் பின்பற்றப்படும் சில நடைமுறைகள் தொடர்பில் இந்திய மருந்து விநியோகத்தர்கள் கவலை வெளியிட்டுள்ளதற்கு இலங்கை சாதகமான பதிலளித்துள்ளதையடுத்து மருந்த பொருட்களின் விலைகள் அதிகரிக்க கூடும் என தெரியவந்துள்ளது.
இறக்குமதி உரிமங்கள் புதுப்பிக்கப்படாமை மற்றும் விலைகளைக் குறைக்குமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபையின் (NMRA) வலியுறுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக இந்திய விநியோகஸ்தர்களால் முன்வைத்துள்ள குறைபாடுகளுக்கு தீர்வு காண அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதை அடுத்து, மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தனது மருந்துத் தேவைகளில் சுமார் 30 சதவீதம் இந்தியாவையே நம்பியுள்ளது.பெருமளவான மருந்துகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்திய மருந்து விநியோகஸ்தர்கள் முன்வைக்கும் பிரச்சினை
சமீபத்தில், இந்திய மருந்து விநியோகஸ்தர்கள் 1,000 க்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்களுக்கான இறக்குமதி உரிமங்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்கள், விலை கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்க்கப்படாத மருந்துகளுக்கும் அதிகபட்ச சில்லறை விலையைக் நிர்ணயிக்குமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) வற்புறுத்துவது சம்பந்தமாகவும் கவலையை வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து விநியோகஸ்தர்களுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க டொலரின் தளம்பலையும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஆனால் இவற்றை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) கணக்கில் கொள்ளவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இலங்கை அதிகாரிகள் தற்போது இந்தக் பிரச்சினைகளக்கு தீர்வு காண்பதில் நெகிழ்வுத்தன்மையைக் காட்டியுள்ளனர். இலங்கையில், தற்போது 61 மருந்துகள் விலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
இது சந்தையின் அண்ணளவாக 30 சதவீதத்தை உள்ளடக்குகிறது. அத்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மருந்துகளின் விலைகளை அதிகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வருவதன் காரணமாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் விலைகளும் அடுத்த மாதம் உயரும் என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட இரு சிறுமிகள் : அவமானத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயிர்மாய்ப்பு
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri