திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ள இன்று நடைபெறவிருந்த முக்கிய அரச விழா - வெளியான அறிவிப்பு
2024/2025 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய மஹாபொல புலமைப்பரிசில் சான்றிதழ் வழங்கும் விழா, தவிர்க்க முடியாத காரணங்களினால் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விழா 2026 செப்டம்பர் 28 (திங்கட்கிழமை) அன்று கொழும்பு, அலரி மாளிகையில் பிரதமரின் அனுசரணையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
விழா நடைபெறும் திகதி
எனினும், மஹாபோல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதிப்பொறுப்புச் சபையினால் இந்த விழா தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர் கல்வி உதவித்தொகை அறக்கட்டளை நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.
குறித்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும், அது மாணவர்களின் புலமைப்பரிசில் கொடுப்பனவையோ அல்லது தெரிவையோ எந்தவிதத்திலும் பாதிக்காது என மஹாபொல நிதிப்பொறுப்புச் சபை Mahapola Trust Fund உறுதியளித்துள்ளது.