விடுதலைப் புலிகளின் தலைவர் முன்னிலையில் செய்யப்பட்ட பதவிப் பிரமாணம்! சரத் வீரசேகர பகிரங்கம்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் இலக்கு நாட்டை பிளவடையச் செய்வதாகும். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர். எனவே அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிக்கலின்றி ஊழியர் சேமலாப நிதியைப் பெற முடியும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போன்று தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதிக்கோ, நம்பிக்கை பொறுப்பு நிதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மத்திய வங்கி ஆளுநரும் மிகத் தெளிவாக இதனைக் குறிப்பிட்டுள்ளனர். எனவே மக்கள் இது தொடர்பில் வீண் அச்சமடையத் தேவையில்லை.
55 வயதின் பின் ஓய்வு பெறும் எவருக்கும் எவ்வித சிக்கலும் இன்றி தமது ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும், எந்த தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அதற்கு எதிர்ப்பினையே வெளியிடும். கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் அம்பாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் இலக்கு நாட்டை பிளவடையச் செய்வதாகும். கூட்டமைப்பின் எம்.பி.க்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர். எனவே அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |