வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க புதிய குழு நியமனம்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
இந்தக் குழு இன்று (08) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர இதனை தெரிவித்தார்.
புதிய குழு
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை இந்தக் குழு உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் குழுவின் தலைவராக பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.