பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நாட்டின் சுகாதார கட்டமைப்பு! ராஜித சேனாரட்ன
நாட்டின் சுகாதார கட்டமைப்பு பாரிய ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருட்களுக்கும் மருத்துவர்களுக்கும் கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மருந்து பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு
மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் பணம் இருந்தாலும் தனியார் துறையினரிடம் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு உயிர் காப்பு மருந்து வகைகளுக்கு மோசமான தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கடுமையான மருந்துப் பொருள் தட்டுப்பாடு இலங்கை வரலாற்றில் எப்பொதும் இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.