சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (28.05.2023) கொழும்பு கேட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில்,குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி விசாரனைப்பிரிவு அதிகாரிகளால் அவர் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
