சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், இன்று(31.05.2026) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
நினைவு நாள் அனுஷ்டிப்பு
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் அனுசரணையுடன், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மறைந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கலந்துகொண்ட பிரமுகர்களினால் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. தமிழ் பேசும் சமூகத்தின் குரலாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் உண்மை நிலவரங்களை அச்சமின்றி வெளிக்கொணர்ந்த ஒரு மூத்த ஊடகவியலாளராகவும் விளங்கிய நடேசனின் இழப்பு, பிராந்திய ஊடகத்துறைக்கு என்றும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என இதன்போது உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, ஞானமுத்து சிறிநேசன் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் இருக்கும் காலத்தில் என்ன மாதிரியான பழக்கம் இருந்தது, அவர் எப்படி படுகொலைச் செய்யப்பட்டார் என்பதையும் அந்த இடத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தையிட்டி விகாரையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!