தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அகமட் விடுத்துள்ள வேண்டுகோள்
கோவிட் தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் துரிதமாக வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான நசீர் அகமட் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியிடமும், கோவிட் - 19 தடுப்பு தேசிய செயலணியினரிடமும் இன்று(30) இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இலங்கையில் அண்மைக்காலமாக வேகமாகப் பரவிவரும் கோவிட் தொற்று நோயின் தாக்கத்தினால் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதுடன், பல மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
இதனைத் தடுக்கும் பல்வேறு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரப் பிரிவினர் பாதுகாப்பு பிரிவினர் ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையிலேயே அவர் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறித்த வேண்டுகோளை
விடுத்துள்ளார்.