இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சுவார்த்தை(Photos)
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங்குடன் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கொழும்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்துள்ளது.
இதில், இருதரப்பு இணக்கப்பாடுகள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
சுற்றாடல் சார்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அமெரிக்காவின் ஒத்துழைப்பை வலியறுத்திய அமைச்சர், காலநிலையை பாதுகாக்கும் சதுப்பு நிலத்திட்டங்கள் குறித்தும், அமெரிக்க தூதுவரின் அவதானத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இருதரப்பு இணக்கப்பாடுகள்
மேலும்,சுற்றாடல் அமைச்சின் செயற்பாடுகளை ஆக்கத்திறனுள்ளதாக்கும் பொருட்டு, அமைச்சின் கட்டடங்களை உச்ச தரத்தில் நிர்மாணிப்பது பற்றியும் இவ்விருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாநாடு இன்னும் இந்தோனேஷியாவின் பாலித் தீவில் நடைபெறும் ஜி 20 மாநாடுகளின் தீர்மானங்களிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக உணவுப் பஞ்சம் குறித்து எச்சரிக்கப்படுவதால் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தங்களிலும் இச்சந்திப்பு கவனம் செலுத்தியுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
