விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி, நீண்ட நேரம் விண்ணில் நடந்த(spacewalk) பெண் என்ற என்ற சாதனை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
பூமிக்கு திரும்புவதில் சிக்கல்
இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
The station was orbiting above London, England, as the Canadarm2 robotic arm maneuvered @Astro_Suni to continue removing radio communications hardware. Watch now on @NASA+. https://t.co/OD43nAlf5m pic.twitter.com/qL9ljPGo4X
— International Space Station (@Space_Station) January 30, 2025
விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
அவர்கள் பெப்ரவரி மாதமளவில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் 'ஸ்பேஸ் வோக்' செய்த பெண் என்ற சாதனை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.
விண்வெளியில் சாதனை
சுனிதா வில்லியம்ஸ் மிகுந்த பாதுகாப்புடன் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் 'ஸ்பேஸ்வோக்' செய்துள்ளார்.
9வது முறையாக ஸ்பேஸ் வாக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ், இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்களை கழித்துள்ளார்.
சுனிதாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
