எதிர்வரும் சூரிய கிரகணத்தில் மூன்று ரொக்கெட்டுகளை அனுப்ப நாசா திட்டம்
அமெரிக்க (America) விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) எதிர்வரும் 8 ஆம் திகதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது மூன்று ரொக்கெட்டுகளை ஏவ உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மூன்று ரொக்கெட்டுகளும் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள அதன் (Wallops Flight Facility) வாலோப்ஸ் விமான ஃபெசிலிட்டியில் இருந்து ஏவப்படவுள்ளன.
நாசாவின் முக்கிய குறிக்கோள்
எதிர்வரும் திங்கட்கிழமை சந்திரனின் நிழல் பகலை இரவாக மாற்றுவதற்கு முன், இந்த மூன்று ரொக்கெட்டுகளை விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், சூரிய கிரகணத்தின் போது சூரிய ஒளியில் ஏற்படும் திடீர் மாற்றம் அயனோஸ்பியரை (Ionosphere) எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய போதுமான தரவுகளை சேகரிப்பதே நாசாவின் முக்கிய குறிக்கோள் என்று கூறியுள்ளது.
மேலும் இந்த சூரிய கிரகணம்(solar eclipse)வானொலி மற்றும் செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கு இடையூறு விளைவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
