கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் சிக்கிய கோடி பெறுமதியான போதைப்பொருட்கள்!
வானூர்தி அஞ்சல் பொதிகள் வாயிலாகக் கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனைக்கு அனுப்பப்பட்ட 60.25 மில்லியன் ரூபாய் சந்தை மதிப்புடைய போதைப்பொருள்களை இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
குஷ், கஞ்சா, ஹசீஸ், கொக்கைன் மற்றும் எக்ஸ்டசி மாத்திரைகள் உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன.
தாய்லாந்து, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இவை அனுப்பபட்டுள்ளன.
பறிமுதல்
மொத்தம் 9 வான்வழி அஞ்சல் பொதிகளில் இவை அனுப்பப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பொதிகளை பெற்றுக்கொள்வதற்கு எவரும் முன்வராததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தபோது, பொதிகளில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று(28.10.2026) போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் மற்றும் அஞ்சல் திணைக்கள அதிகாரிகளின் முன்னிலையில் அந்த 9 பொதிகளும் திறக்கப்பட்டுச் சோதனை செய்யப்பட்டன.
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam