யாழ் சுன்னாகம் பகுதியில் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(7) யாழ்.பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், போதை மாத்திரைகளை இளைஞன் ஒருவர் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதாக சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் குறித்த இளைஞனை சோதனையிட்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, இளைஞனின் உடமையில் இருந்து 500 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியதுடன், இளைஞனையும் கைது செய்தனர்.

சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri