மீன் உட்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை! வெளியாகியுள்ள அறிவிப்பு
மீன் நுகர்வு தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை என்று தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உறுதியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பலில் இருந்து இரசாயனம் மற்றும் பிற கழிவுப் பொருட்கள் வெளியாகியுள்ள நிலையில் மீன் நுகர்வுக்கு ஏற்றது அல்ல என்று பல்வேறு தரப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும், நாராவின் ஆரம்ப அறிக்கையின்படி, மீன் உட்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பலுக்கு எதிரான எதிர்கால சட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இன்று நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிபிடத்தக்கது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan