நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து: தெய்வாதீனமாக உயிர்தப்பிய பாடசாலை மாணவர்கள்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று(23) காலை நானுஓயா தொடருந்து சுரங்கப்பாதைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
நானுஓயா பிரதான நகரில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும், இதில் பயணித்த இரண்டு பாடசாலை மாணவர்களும் சிறு காயங்களுடன் தெய்வாதீனதாக உயிர்தப்பியுள்ளனர்.
அதிக வேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் எனவும் எவ்வாறாயினும் முச்சக்கர வண்டி கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri