பயணிகள் இன்றி வெறிச்சோடிய நானுஓயா தொடருந்து நிலையம்
தொடருந்து நிலைய அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நானுஓயாவில் பயணிகள் கூட்டமில்லாததால் தொடருந்து நிலைய வளாகம் வெறிச்சோடி காணப்படுகின்றது.
ஆட்சேர்ப்பு பிரச்சினைகள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து நேற்று வெள்ளிக்கிழமை(16) நள்ளிரவு முதல் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் நானுஓயாவிலிருந்து இயக்கப்படும் விசேட தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டன.
பொது மக்களின் நலன்
மேலும் இன்று(17) காலை முதல் ஏனைய ஊழியர்கள் இணைந்து தொடருந்து நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், தொடருந்து கடவைகள் திருத்த பணிகளும் முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
எவ்வாறாயினும் இன்று காலை நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி பயணிப்பதற்கு ஏற்கனவே தொடருந்து ஆசனங்கள் முற்பதிவு செய்த உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், இனி வரும் நாட்களில் இவ்வாறான பணிப்புறக்கணிப்புக்களை ஆரம்பிக்கும் போது, பொது மக்களின் நலன் கருதி பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
