வடக்கு மாகாணத்தில் உயர் அதிகாரிகளின் பதவிகள் பறிப்பு: ஆளுநர் நடவடிக்கை
பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேச சபைச் செயலாளர்களின் பதவிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் பறிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளரின் பதவி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், ஒரு நகரசபைச் செயலாளர் மற்றும் மூன்று பிரதேசசபைச் செயலாளர்கள் ஆகியோரின் பதவிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
விசாரணை ஆணைக்குழுக்கள்
மேலும், அவர்கள் வேறு திணைக்களங்களுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலருக்கு எதிராக விசாரணை ஆணைக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
