நானுஓயா தமிழ் வித்தியாலயத்திற்கு வருகை தந்த அமெரிக்க ஆசிரியர்
நுவரெலியா நானுஓயா எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்திற்கு அமெரிக்காவில் இருந்து ஆங்கில ஆசிரியர் ஒருவர் வருகை தந்துள்ளார்.
குறித்து அமெரிக்க ஆங்கில ஆசிரியரை வரவேற்கும் வைபவமானது நேற்றுமுன்தினம் (11) பாடசாலையின் அதிபரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்று 2024ஆம் ஆண்டுக்கான புதிய தேர்ச்சி பெற்ற அமெரிக்க நாட்டில் இருந்து ஆசிரியர்களை தெரிவு செய்து இலங்கை கல்வி அமைச்சுடன் இணைந்து மத்திய மாகாணத்தில் சில பாடசாலைகளை தெரிவு செய்துள்ளது.
ஆங்கில மொழித்திறன்
இதில் மூன்று மாதங்கள் இலங்கையில் மொழி சம்பந்தமான பயிற்சிகள் பெற்ற ஆங்கில பாடநெறிக்காக நானுஓயா எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்திற்கு வழங்கியுள்ளனர்.
இதன் பிரதான நோக்கமானது மாணவர்களின் ஆங்கில மொழியின் திறன்களை அதிகரிப்பதற்கு ஆகும்.
மேலும் இந்த வைபவத்திற்கு நுவரெலியா வலய ஆங்கில கல்வி ஒருங்கிணைப்பாளர், நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
செய்தி - திவாகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |