7 பேரின் உயிர்களை காவுகொண்ட நானுஓயா விபத்து! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை (Video)
கடந்த 20ம் திகதி நானுஓயா - ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
கொழும்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று வான் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டதில் விபத்து இடம்பெற்றது.
நானுஓயா குறுக்கு வீதியில் கோவில் ஒன்றுக்கு அருகில் உள்ள வளைவு ஒன்றில் பயணித்த போது, குறித்த பேருந்தின் தடையாளி உரிய வகையில் இயங்காமையால் இவ்விபத்து நேர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வீதி செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிப் பிரதேசங்கள் அல்லது மாவட்டங்களில் இருந்துவரும் சாரதிகள் நானுஓயா குறுக்கு வீதியை பயன்படுத்துவதால் இதுபோன்ற விபத்துகள் அதிகரிப்பதாகவும் அவர்களுக்கு அவ்வீதியின் தன்மை புரிவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்ததுடன் இதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இணைந்து போக்குவரத்து பரிசோதைனை உத்தியோகத்தர்களும் அப்பகுதியில் இயங்கும் பேருந்துகளின் இயங்கு நிலையைப் பரிசோதித்து வருகின்றனர்.
இது தொடர்பான முழுமையான தகவல்களை இக்கொணொளியில் காணலாம்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 5 மணி நேரம் முன்

அசோக் செல்வன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர்தான் காரணமாம்! புகைப்படத்துடன் லீக்கான விமர்சனம் Manithan

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri
