நந்தா மாலினி மறைவையொட்டி அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
மூத்த இசைக்கலைஞர் பாடகி நந்தா மாலனியின் மறைவை முன்னிட்டு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுநாள் (23) ஆகிய மூன்று நாட்களை தேசிய துக்க நாளாக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, அந்நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவித்துள்ளள்ளது.
சுற்றறிக்கை வெளியீடு
நாட்டின் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையிலும், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்/அரசாங்க அதிகாரிகள், திணைக்களங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை எண் 04/2026-இன் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 ஆகஸ்ட் 2026 அன்று வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோகா பண்டார கையொப்பமிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5