நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்
நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது.
நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபை அமர்வு தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தலைமையில் இன்று(14) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
கூட்டம் ஆரம்பமாகியதிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம் பெற்றது.
எனினும் வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக இடம் பெற்றது. இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிகமான ஒரு வாக்கினால் நிறைவேறியுள்ளது.
ஆதரவாகத் தலைவர் உள்ளிட்ட 7 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கலாக 8 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
தவிசாளரின் மேலதிக வாக்கினால் வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றது. வரவு செலவு திட்டத்திற்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உதய சூரியன் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஈ.பி.டி.பி.கட்சி உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு
வெற்றி பெற்றது.



ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri