உயர் மட்ட தீர்மானத்தை நானாட்டான் பிரதேச செயலாளர் மீறுவதாக குற்றச்சாட்டு
மாவட்ட ரீதியில் இடம் பெறும் மணல் அகழ்வுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுடன், மணல் அகழ்வு மற்றும் அனுமதி தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தியதன் பின்னர் கட்டாய தேவைகளுக்கான மணல் அகழ்வுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதாகக் கடந்த வாரம் இடம்பெற்ற நானாட்டன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உயர் மட்ட குழுவினரால் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு அமைய மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர், மடு, மாந்தை, முசலி ஆகிய பிரதேச செயலகங்களுக்கான மணல் அகழ்வு அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நானாட்டன் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் தற்போது வரை மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதே நேரத்தில் பிரதேச செயலக ஒருங்கிணைப்புகுழுக் கூட்டங்களில் பெரும்பாலும் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் வெறுமனே தீர்மானங்களாகவே எழுத்துக்களில் காணப்படுவதாகவும், நடை முறைப்படுத்தப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த விடயங்களில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 46 நிமிடங்கள் முன்
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri