சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயர் வையுங்கள்..! பிமலுக்கு சத்தியலிங்கம் பதிலடி
சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயரை வையுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்(P.Sathiyalingam) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் (Vavuniya) இன்று (26) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின், ஊடகவியலாளர் ஒருவர் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆனையிறவு உப்பு விடயத்தில் பெயரை பார்க்க வேண்டாம். சுவையை பாருங்கள் எனக் கூறியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆனையிறவு உப்பு விடயம்
மேலும் தெரிவிக்கையில், உப்பில் ருசியைத் தான் பார்க்க வேண்டும். அது தான் உண்மை.
ஆனால் உங்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கும் சத்தியலிங்கம் என்று பெயரை வையுங்கள். ஏன் ரத்நாயக்கா, விமல் வீரவன்ச, அந்த வன்ச, இந்த வன்ச என பெயரை வைக்கிறீர்கள்.
சத்தியலிங்கம், சுந்தரலிங்கம், பொன்னம்பலம் என உங்களது பிள்ளைகளுக்கும் பெயரை வையுங்கள். ஏன் என்றால் உங்களுக்கு பிள்ளை தானே வேண்டும். பெயர் முக்கியமில்லை தானே. அதற்கு பிறகு நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
