மொட்டு கட்சியிலிருந்து வெளியேறும் நாமல் அணி...! பெரும்பான்மைக்கு ஏற்படபோகும் ஆபத்து - செய்திகளின் தொகுப்பு
அமைச்சுப் பதவிக்காக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச விசுவாசிகள் அரசில் இருந்து வெளியேறினாலும் இந்த ஆட்சி கவிழாது. எனவே, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டிய தேவை எழாது என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட நிமல் லான்சா கூறியுள்ளதாவது, தற்போது நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுகின்றார். ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக ஆளுங்கட்சியினரைச் சந்தித்தபோது, நாடாளுமன்றம் கலைக்கப்படுமா என மொட்டுக் கட்சியினர் ஜனாதிபதியிடம் வினவினர்.
இதன்போது அவ்வாறு கலைக்கப்படமாட்டாது, எனினும், நீங்கள் கூறும்வேளை, அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி பதிலளித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri