அரசியல் களத்தில் இறங்கப் போகும் நாமலின் மனைவி லிமினி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுண கட்சியின் மக்கள் போராட்டப் பேரணி நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
நாமலின் மனைவி லிமினி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எனினும் அவர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தப் பேரணியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாக, அவரது மனைவி லிமினி ராஜபக்ச பிரதான மேடைக்கு வந்து மக்களிடம் உரையாற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் கொழும்பில் லிமினி தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவும், ஊடகச் சந்திப்பொன்றை நடத்தவும் அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20