நாமல் ராஜபக்ச கற்பிட்டி விஜயம்! துயரங்களுக்கு செவிமடுப்பு
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கற்பிட்டி பிரதேசத்துக்கு நேற்றையதினம் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கற்பிட்டி இலந்தையடி பிரதேசத்தில் கடற்றொழில் சமூகத்தினரை சந்தித்து அவர்களின் குறைகளுக்கும் அவர் செவிமடுத்துள்ளார்.
இதன்போது, கற்பிட்டி தொடக்கம் மன்னார் வரையான கடற்பிரதேசத்தில் வெளிநாட்டு கடற்றொழிலாளர்களின் இழுவைப் படகுகள் மடிவலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதன் காரணமாக உள்நாட்டு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
A meeting was held today between the Hon. Member of Parliament @RajapaksaNamal and the fishing community in the Ilanthiadiya area of Norochcholai, Kalpitiya. At this meeting, various issues currently facing the fishing community were discussed. pic.twitter.com/Etp2uiENm2
— Namal Rajapaksa Media (@Media_NR) September 28, 2025
கலந்துரையாடல்
குறித்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



