நாமல் ஏற்படுத்த முயற்சிக்கும் மாற்றம்!
நாட்டின் அரகலய போராட்டத்தின் போது கோசமாக மாறிய அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த பிள்ளைகளை வெறுப்பதில் பயனில்லை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவால் தூண்டப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரகலய
போராட்டத்தின் போது சேதமடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட அரசியல் அலுவலகம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இதனை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் "எமது கட்சியில் இருந்தே மாற்றத்தை ஆரம்பிக்க தயாராக இருக்கின்றோம். என் தாத்தாவின் சிலை உடைக்கப்பட்டது.நாங்கள் குடியிருந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
மாற்றம்
இவ்வாறு செயற்பட்ட பிள்ளைகளை வெறுப்பதில் பயனில்லை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவால் தூண்டப்பட்டனர்.அதை புரிந்துகொள்ள நான் தந்தையாக வேண்டி இருந்தது.
எனவே பெரியவர்களாகிய உங்கள் பொறுப்பு, அந்த குழந்தைகளுக்கு யதார்த்தத்தை விளக்குவது, அவர்கள் உலகத்தை திறந்த மனதுடன் பார்க்க வேண்டும்."என கூறியுள்ளார்.
மேலும் அரகலய போராட்டத்தின் போது தீயிட்டு அழிக்கப்பட்ட இந்த அலுவலகம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
