நாமலின் பரிதாப நிலை - அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதி உட்பட ராஜபக்ச கூட்டணி
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் என்ற கனவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தீவிரமாக செயற்பட்டு வருகிறார்.
அதற்கு சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுஜன பெரமுன கட்சியினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போதைய கள நிலவரம் அந்த தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாரிய கூட்டம்
கடந்த 12ஆம் திகதி அனுராதபுரத்தில் அநுர அரசாங்கத்திக்கு எதிராகவும், நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாகவும் பாரிய கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் பின்னர் நாமல் ராஜபக்ச முற்றிலும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அவரது நிலைமை நேற்று முன்தினம் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, கடந்த 04 ஆம் திகதி ஊழல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.
ஏமாற்றத்தில் நாமல்
அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது திரண்டிருந்த ஆதரவாளர்களும் நேற்று முன்தினம் அங்கு இருக்கவில்லை.
ஆதரவாளர்களுக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிணையில் வெளிவந்துள்ள ஒரு சிலர் மட்டுமே வருகை தந்திருந்தனர்.

பாரிய மக்கள் ஆதரவு உள்ளதாக காட்டிக்கொண்ட ராஜபக்ச தரப்பினருக்கு, இந்த செயற்பாடு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதேவேளை, நாமலை அடுத்த ஜனாதியாக மாற்றப் போவதாக சூளுரைத்துள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் பெரும் அதிருப்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.