கிரிஷ் வழக்கு : விடுவிக்கப்படுவாரா நாமல்...! கசியும் அதிர்ச்சித் தகவல்கள்
நாமலின் சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ வழக்கில் டிசம்பர் 18ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிவான் குறிப்பிட்ட அறிக்கைகள், குற்றங்கள் விசாரணை பிரிவில் மாயமாகி விட்டதாக தெரியவந்துள்ளது.
சட்ட மா அதிபரால் தாக்கல் செய்த வழக்கு கடந்த 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கை டிசம்பர் 18ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு ஒன்பது வருடங்களின் பின்னர் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்க காலத்தில்
நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பினால் அன்றைய அரசாங்கத்தில் ஊழலுக்கு எதிரான குழுவுக்கு ‘கிரிஷ்’ திட்டத்தில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக இருந்து பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார தலைமையில் நடைபெற்ற விசாரணையில் ‘கிரிஷ்’ நிறுவனத்திடமிருந்து றக்பி அபிவிருத்திக்காக பெற்றுக் கொண்ட 70 மில்லியன் பணத்தில் மோசடி நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.
குறித்த 70 மில்லியன் ரூபா பிறிமியர் ஸ்போட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டுக்கு வழங்கப்பட்டதாகவே கூறப்பட்டது. அந்த நிலையில் குறித்த நிறுவனத்திடம் கேட்ட போது அது தங்களுக்கு கிடைக்கவில்லையென தெரிவித்திருந்தது.
றக்பி அபிவிருத்திக்காக 70 மில்லியன் ரூபா
அதன் பின்னரே நாமல் ராஜபக்ச விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.ஏனென்றால் நாமலே றக்பி அபிவிருத்திக்கு அனுசரணை வழங்குமாறு நிறுவனத்திடம் கோரியிருந்தார். விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டு பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.
அதன் பின்னர் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு கலைக்கப்பட்டது. அதன் பின்னர் விசாரணைகள் நடைபெறவில்லை. பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார ஓய்வு பெற்ற பின்னர் 2017 ஆம் ஆண்டு கிரிஸ் டான்ஸ்வர்க் பிரைவட் லிமிடட்டில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அப்போது இது பெரும் பேசுபொருளாக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த வழக்கில் நீதிபதி சமர்ப்பிக்க சொன்ன அறிக்கை அதாவது நாமல் ராஜபக்ச 70 மில்லியனை எவ்வாறு செலவு செய்தார் என அன்று பொலிஸ் நிதி குற்றப்பிரிவு விசாரணை செய்த அறிக்கையே குற்றங்கள் விசாரணைப் பிரிவில் மாயமாகியுள்ளது.
2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பதிவிக்கும் இதற்கும் ஏதும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 18 ஆம் திகதி நீதிமன்ற விசாரணையில் பல விடயங்கள் தெரியவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



