சஜித்தை வாழ்த்தி நாமலை சாடிய அர்ச்சுனா ராமநாதன் எம்.பி
நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தால் தமிழ் மக்களின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும். முஸ்லிம் மக்களின் ஆதரவு எப்போதும் சஜித்துக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மக்களின் அனைத்து வாக்குகளும் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் என்றார்.
தனது சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
அரசாங்கத்திற்கு ஏற்படப்போகும் சிக்கல்
நாமலுக்கு மறுபடியும் எமது மக்கள் வடக்கு மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. நாலுக்கு பத்தாயிரம் வாக்குகள் வருமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன்.
12 இலட்சம் வாக்குகளில் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு வாக்குகள் கிடைப்பபோதில்லை என்பதே யதார்த்தமாகும். வடக்கு மக்கள் யாருமே வாக்குப் போடப்போவதில்லை.
2027 ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கு பின்னர் அநுர அரசாங்கம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கப் போகிறது. இதற்கு பின்னர் வரபோகும் அரசாங்கம் பயங்கர இனவாதம் கொண்ட அரசாங்கமாக இருக்கப் போகிறது.

ஊழலுக்கு எதிரான கதையே இருக்காது.ஏனென்றால் தற்போது ஊழலை யாருமே நிரூபிக்கவில்லை என்பதால் நன்றாகவே ஊழல் செய்யப்போகிறார்கள். ஊழலுக்கு எதிராகவே அநுர அரசாங்கத்தை கொண்டு வந்தோம்.
ஆனால் அவர்களே ஊழல் செய்கின்றனர். அத்தோடு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கொடுப்பார்கள் என நினைத்தோம் ஆனால் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
ஊழல் வாதிகளை பிடிக்காமல் அவர்கள் ஊழல் செய்கிறார்கள். அதனால் இந்த அரசாங்கம் ஒரு வருடத்தில் முடியப்போகிறது என குறிப்பிட்டுள்ளார்.