கொள்கலன்கள் விடுவிப்பு தேர்வுக் குழுவிலிருந்து வெளியேறிய அமைச்சர்!
கொழும்பு துறைமுகத்தில் பரிசோதனையின்றி விடுக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிலிருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
விலகுவதற்கான காரணம்
குழுவின் தலைவர், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சாட்சியங்களை விசாரணை நடத்துவதற்கு முன்னர் தேர்வுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதோடு வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக அமைச்சு பதிவியை வகிப்பதால் விசாரணைகளின் உண்மை தன்மைக்கு பாதகம் விளைவிக்கும் என்பதால் தான் பதவி விலகியதாக தெரிவித்துள்ளார்.

323 கொள்கலன்கள் விடுவிப்பு விசாரணைக் குழு (11.02.2026) மூன்றாவது தடவையாக கூடியது.
அன்றைய தினம் இலங்கை சுங்க அதிகாரி சீவலி அருக்கோட உள்ளிட்ட இலங்கை சுங்க அதிகாரிகள் குழு அழைக்கப்பட்டு, சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன.