பலாங்கொடை கஸ்ஸப தேரரின் அப்பட்டமான பொய் - அம்பலப்படுத்தும் அரசியல் முக்கியஸ்தர்
தாம் மிரட்டியதாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் கூறியது பொய் என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி 14ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர் 28 நாட்களுக்கு பின் நீதிமன்றத்தினால் கடந்த 11ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் கடந்த 12ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பல விடயங்கள் குறித்து தெரிவித்திருந்தார். அதில் அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் தமக்கும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தேரர்களுக்கும் அழைப்பு விடுத்து அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
பிரதி அமைச்சரின் கருத்து
இந்த நிலையில் தேரரின் கருத்து தொடர்பில் பிரதி அமைச்சர் கூறுகையில், என்னைப் பற்றி ஊடகங்களுக்குப் பொய்யான கூற்றுக்களைத் தெரிவிப்பதன் மூலம் பலாங்கொடை கஸ்ஸப தேரர் எதிர்பார்க்கும் உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது.
அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள்

நானோ அல்லது எனது பிரதிநிதி ஒருவரோ பலாங்கொடை கஸ்ஸப தேரருக்குப் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவில்லை. முசாவாதா வேரமணி சிக்காபதம் சமாதியாமி (பொய் பேசுவதைத் தவிர்த்தல்) என்ற வாசகத்தை எமக்குக் கற்றுக்கொடுப்பவர்களே கௌரவ தேரர்கள் தான். இது ஒரு அப்பட்டமான பொய் என்பது கஸ்ஸப தேரருக்கு நன்றாகத் தெரியும் என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan