மாவிலாறு மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பம்
டிட்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த மாவிலாறு அணைக்கட்டை சீரமைத்து, அல்லை–மாவிலாறு விவசாயத் திட்டத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் தொடக்க விழா இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(13.02.2026) அல்லை, மாவிலாறு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சருமான கே.டி. லால்காந்த கலந்து கொண்டு திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
அத்துடன், இந்த திட்டத்திற்காக சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேலைத்திட்டம்
மேலும், திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புகளிலிருந்து அல்லை, மாவிலாறு அண்மித்த பகுதிகளை பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிகழ்வில், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, கமத்தொழில், பிரதி அமைச்சர் திரு. அரவிந்த செனரத் விதாரண ந, நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன், கந்தளாய் பிரதேச செயலாளர் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.