கோட்டாபயவை வீழ்த்திய நாமல்! மகிந்தவின் பேச்சும் எடுபடவில்லை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் பயணம் பாதிப்படைய நாமல் ராஜபக்ச உள்ளடங்களாக அவரின் குடும்பத்தில் சிலரே காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் பேச்சும் எடுபடவில்லை
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சன்ன ஜயசுமன மேலும் கூறுகையில்,
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வருவதற்கு நாங்களே பாடுபட்டோம். நாங்கள் பல்கலைக்கழகங்களில் பதவிகளையும் எங்களின் தொழில்களையும் கைவிட்டு வந்தே கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினோம்.
அவர் நாங்கள் கூறுவதை போன்று வேலை செய்வார். நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வார் என்றே நினைத்தோம். அதன்படி முதல் சில மாதங்களுக்கு அவர் அவ்வாறு வேலை செய்தார். ஆனால் சில மாதங்களின் பின்னர் அவர் நாங்கள் கூறுவதை கேட்கவில்லை.
நாமல் கூறியதை செய்த கோட்டாபய
குறைந்தது மகிந்த ராஜபக்ச கூறுவதைக் கூட கோட்டாய ராஜபக்ச கணக்கில் எடுக்கவில்லை. அவர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அவரின் குடும்பத்தில் சிலர் கூறியவற்றையே கேட்டார்.
இதன்படி நாமல் ராஜபக்ச கூறுவதைப் போல வேலை செய்யப் போனதினாலேயே அவர் குழப்பிக் கொண்டார். நாங்கள் கூறியவாறு வேலை செய்திருந்தால் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்.
ஆனால் இப்போது எங்களின் தோள்களில் இந்த பாவங்களை சுமத்துவதற்கு நாமல் ராஜபக்ச முயற்சிக்கின்றார். அவர் அனைத்து பாவங்களையும் செய்துவிட்டு அந்தப் பாவங்களை கழுவ முடியாது.
நாமல் ராஜபக்ச வழங்கிய தவறான ஆலோசனைகளினாலேயே முழு நாடும் இப்படி துன்பப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.