மாட்டுக்கு பொங்கல் ஊட்டிய அமைச்சர் நாமல்! - கொட்டகலையில் பட்டிப் பொங்கல் நிகழ்வு (Video)
உழவர் திருநாளை முன்னிட்டு இன்றையதினம் (15) மலையகத்தில் பட்டிப் பொங்கல் மிகவும் சிறப்பாகக் கால்நடை வளர்ப்பாளர்களால் கொண்டாடப்பட்டது.
அந்தவகையில் மலையகத்தில் பிரதான நிகழ்வு கொட்டகலை ரொசிட்டா தேசிய பண்ணை வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் பட்டிப் பொங்கல் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான நாமல் ராஜபக்ச, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, கண்டி இந்திய உதவி தூதுவர் ஆதிரா, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரமேஷ்வரன், இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது பொங்கல் வைத்து கால்நடைகளுக்குப் பிரதம அதிதிகள் பொங்கல் ஊட்டி நிகழ்வைச் சிறப்பித்தனர்.







13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan