நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அவதூறு- மொட்டுக் கட்சி சி.ஐ.டி.யில் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்து, மொட்டுக் கட்சி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதியொருவரை படுகொலை செய்ய நாமல் ராஜபக்ச சதித்திட்டமொன்றை மேற்கொண்டதாக இணையத்தளமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
சி.ஐ.டி.யில் முறைப்பாடு
எனினும் குறித்த செய்தி திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டுப் பணத்தில் இயங்குவதாகவும் மொட்டுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அதன் காரணமாக குறித்த இணையத்தளம், அதன் உரிமையாளருக்கு எதிராக மொட்டுக் கட்சி சார்பில் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.




