வடக்கு - கிழக்கு மக்கள் மீது நாமல் காட்டும் அக்கறை.. அநுரவிடம் கோரிக்கை
வடக்கு, கிழக்கு மக்களுக்காக, மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கம்பஹா - திஹாரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், "மாகாண சபை தேர்தலை நடத்தி, வடக்கு மக்களுக்கான அதிகாரத்தை வழங்க, அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்.
தயார் நிலையில்..
நாட்டில் அடுத்து நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளது.

இதற்காக, கிராமிய மட்டத்தில் தமது அரசியல் குழுக்களை பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam